"ஊழியர்களுக்கு சம்பளம் தர முடியாத நிலையில் ஐ.நா. தவிப்பு"
ஐக்கிய நாடுகள் நிதிப் பற்றாக்குறையுடன் செயல்படுவதால் ஊழியர்களுக்கு சம்பளம் அளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அதன் பொது செயலர் ஆன்டோனியா கட்டர்ஸ் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் நிதிப் பற்றாக்குறையுடன் செயல்படுவதால் ஊழியர்களுக்கு சம்பளம் அளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அதன் பொது செயலர் ஆன்டோனியா கட்டர்ஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஐ.நா சபையில் பணிபுரியும் 37 ஆயிரம் ஊழியர்களுக்கு அவர் கடிதம் எழுதி உள்ளார். அதில், நடப்பு ஆண்டில் உறுப்பு நாடுகள் பட்ஜெட் நடவடிக்கைகளுக்கு தேவையான நிதியில் 70 சதவீத த்தை மட்டுமே வழங்கி உள்ளதாக கூறி உள்ள அவர், இதனால் செப்டம்பர் மாத இறுதியில் ஐ.நா.வின் நிதிப்பற்றாக்குறை 230 மில்லியன் டாலராக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
Next Story