இலங்கை அதிபர் தேர்தல் வேட்புமனு தாக்கல் : கோத்தபய ராஜபக்சே - சஜித் பிரேமதாசா போட்டி

இலங்கை அதிபர் தேர்தலில் விடுதலைப் புலிகளை வீழ்த்திய முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் சகோதரர் கோத்தபய ராஜபக்சேவுக்கும், விடுதலைப்புலிகளால் கொல்லப்பட்ட முன்னாள் அதிபர் பிரேமதாசாவின் மகன் சஜித் பிரேமதாசாவுக்கும் இடையே, கடும் பலப்பரீட்சை உருவாகி உள்ளது.
இலங்கை அதிபர் தேர்தல் வேட்புமனு தாக்கல் : கோத்தபய ராஜபக்சே - சஜித் பிரேமதாசா போட்டி
x
இலங்கை அதிபர் தேர்தலில் விடுதலைப் புலிகளை வீழ்த்திய முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் சகோதரர் கோத்தபய ராஜபக்சேவுக்கும், விடுதலைப்புலிகளால்
கொல்லப்பட்ட முன்னாள் அதிபர் பிரேமதாசாவின் மகன் சஜித் பிரேமதாசாவுக்கும் இடையே, கடும் பலப்பரீட்சை உருவாகி உள்ளது. அதிபர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல், கொழும்பில் உள்ள அந்நாட்டின் தேர்தல் அலுவலகத்தில் நடைபெற்றது. ராஜபக்சேவுடன் வந்து, கோத்தபய ராஜபக்சே மனு தாக்கல் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கோத்தபய ராஜபக்சே, தனக்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்தார். ஐக்கிய தேசிய முன்னணி சார்பில், 52 வயது சஜித் பிரேமதாசா, மனு தாக்கல் செய்தார். தமிழர் பிரதிநிதி சிவாஜிலிங்கம் உள்பட மொத்தம் 35  பேர், போட்டியிடுகிறார்கள். எனவே, வருகிற நவம்பர் 16 - ம் தேதி நடைபெறும் இலங்கை அதிபர் தேர்தல், அந்நாட்டில், பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்