"ஈஸ்டர் தின தாக்குதலுக்கு பின் மக்கள் அச்சத்துடன் உள்ளனர்" - இலங்கை எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ச புகார்
ஈஸ்டர் தினத்தில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலுக்கு பின்னரும் மக்கள் அச்சத்துடனும், சந்தேகத்துடனுமே தொடர்ந்து காணப்படுவதாக இலங்கை எதிர்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அம்பாந்தோட்டையில் புத்தர் சிலை திறந்து வைத்து பேசிய அவர், தேசிய பாதுகாப்பை உறுதிசெய்து மக்களின் உரிமைகளைப் பெற்றுக்கொடுப்பது தமது தலையாயக் கடமை என்று கூறியுள்ள அவர், மக்கள் சிறந்த முடிவு ஒன்றை எடுக்கும் தருணம் உதயமாகிவிட்டது என்றும் தெரிவித்துள்ளார். குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் சமூகங்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள அச்சமும், சந்தேகமுமான சூழலை நீக்குவதற்கு தற்போதைய அரசாங்கம் எந்தவொரு நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை என்றும் ராஜபக்சே குற்றம்சாட்டி உள்ளார்.
Next Story