ஆப்கானிஸ்தானில் சாலையோர சிறுவர்களுக்கு இசையை கற்பிக்கும் மாணவி - சிறுவர்களின் கல்விக்கு நிதி அளித்து உதவி
ஆப்கானிஸ்தானில் சாலையோர சிறுவர்களுக்கு இசையை கற்றுக்கொடுத்து அவர்களின் கல்விக்கும் உதவும் 17 வயது மாணவியின் சேவை ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தானில், சாலையோர சிறுவர்களுக்கு இசையை கற்றுக்கொடுத்து, அவர்களின் கல்விக்கும் உதவும் 17 வயது மாணவியின் சேவை ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. 17 வயது மாணவி மசூமா மொஹம்மாதி இசைக்குழு ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் வாரம் இரு முறை, காபூல் நகர சாலையோரத்தில் வசிக்கும் சிறுவர்களுக்கு இசையை கற்று கொடுக்கிறார். தனது இசைக்குழு மூலம் கிடைக்கும் பணத்தை கொண்டு, அந்த சிறுவர்களின் கல்விக்கும் நிதி அளித்து உதவி வருகிறார். வன்முறையும், பெண்களுக்கு கட்டுப்பாடுகளும் நிறைந்த ஆப்கானிஸ்தானில் இசையின் மூலம் மாணவி ஆற்றும் இந்த சேவை அனைவரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளது.
Next Story