அக்டோபர் மாதம் மாமல்லபுரத்தில் சீன அதிபருடன், பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு

வரும் அக்டோபர் மாதம் மாமல்லபுரத்தில் சீன அதிபருடன், பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேச உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் மத்திய, மாநில அரசுகளின் உயரதிகாரிகள் கண்காணிப்பில் நடைபெற்று வருகிறது.
அக்டோபர் மாதம் மாமல்லபுரத்தில் சீன அதிபருடன், பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு
x
கடந்தாண்டு ஏப்ரலில் சீனாவின்  Wuhan நகரில் பிரதமர் நரேந்திர மோடிக்கு விருந்தளித்த, அந்நாட்டு அதிபர் விருந்தளித்தார். இந்த 2 நாள் சந்திப்பின் போது, இருதரப்பு உறவு மற்றும் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. மேலும், நாட்டின் வளர்ச்சி, நடப்பு டற்றும் எதிர்கால சர்வதேச சூழல் குறித்து இருநாட்டு தலைவர்களும் ஆலோசித்தனர். இந்த பயணத்தின் போது, Hubei மாகாண அருங்காட்சியகத்தை பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் பார்வையிட்டனர். இந்நிலையில், சீன அதிபருக்கு வரும் அக்டோபரில் பிரதமர் நரேந்திர மோடி விருந்தளிக்கிறார். வரும் அக்டோபர் 11 முதல் 13 வரை நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மத்திய, மாநில அரசு உயரதிகாரிகள் கண்காணிப்பில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. யுனெஸ்கோ புகழ்பெற்ற மாமல்லபுரம் சிற்பங்களை சீன அதிபர் ஜி ஜின்பிங்குக்கு, பிரதமர் நரேந்திர மோடி அழைத்து சென்று காட்ட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்புக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக அரசுடன், வெளியுறவுத்துறை அமைச்சக மூத்த அதிகாரிகள் ஆலோசனை நடத்தி சென்றுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்