அமேசான் காடுகளில் தொடர்ந்து பற்றி எரியும் தீ : திட்டமிட்டு வைக்கப்பட்ட தீ என பரபரப்பு புகார்

அமேசான் தீ விபத்து திட்டமிட்டு பற்ற வைக்கப்பட்ட தீ என்று பரபரப்பு புகார் எழுந்துள்ளது.
x
உலகில் நுரையீரல் என அழைக்கப்படும் அமேசான், காடுகளில் பற்றிய தீ, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில், பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. தீயை அணைக்கும் முயற்சியில் பிரேசில், மற்றும் பொலிவியா தீவிரமாக இறங்கியுள்ளன. இரு நாடுகளும், தீயணைப்புப்பணியில் ராணுவத்தை இறக்கியுள்ளன. பெரு உள்ளிட்ட நாடுகளும், தீயணைப்புப்பணியில் உதவ முன் வந்துள்ளன. இருப்பினும் தீயை கட்டுப்படுத்துவது பெரும் சிரமமாக உள்ளது. அரிய வகை மரம் செடி கொடிகள், தீயில் கருகி, அழிந்து வருவதோடு, விலங்குகளும், பாம்பு உள்ளிட்ட உயிரினங்களும், அழிந்து வருகின்றன. தப்பி பிழைக்க, முயன்று காட்டை விட்டு வெளியேறும் போது பாதிப்பை சந்தித்து வருகின்றன. இந்நிலையில், உலகின் பல்வேறு பகுதியில் உள்ள, செய்தியாளர்கள் அங்கு படையெடுத்து உள்ளனர். அமேசான் காடுகளின் தற்போது நிலையை ஒளிப்பதிவாளர் காப்பிரியலா பிலோ படம்பிடித்து தந்தி டிவிக்கு அனுப்பியுள்ளார். இந்த தீ விபத்து குறித்து தந்தி டிவிக்கு பிரத்யேக தகவலை அனுப்பியுள்ள செய்தியாளர் ஆண்டிரி போர்கிஸ், இது திட்டமிட்டு பற்ற வைக்கப்பட்ட தீ என்று பரபரப்பு புகார் கூறியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்