அமேசானில் காட்டுத்தீயை அணைக்கும் பணி தீவிரம்...
பிரேசில் அமேசான் மழைக்காடுகளில் பற்றி எரிந்து வரும் காட்டுத்தீயை அணைக்கும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பிரேசில் அமேசான் மழைக்காடுகளில் பற்றி எரிந்து வரும் காட்டுத்தீயை அணைக்கும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அந்நாட்டின் அல்டாமிரா பிராந்தியத்தில் காட்டுத்தீயினால் பாதிக்கப்பட்ட மரங்கள் வெட்டப்பட்டு, லாரிகள் மூலம் அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது. காட்டுத்தீ காரணமாக பிரேசில் மற்றும் பொலிவியா நாடுகளின் காற்று மண்டலத்தில் கார்பன் மோனாக்சைடு கலந்திருப்பதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளன. இதனால் தென் அமெரிக்காவின் பருவ நிலையில் தாக்கம் ஏற்படவும், மழை அளவு குறையவும் வாய்ப்பு உள்ளதாக ஆக்ஸ்போர்டு பல்லைக்கழக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
Next Story