பிரிட்டனின் புதிய பிரதமாராக போரிஸ் ஜான்சன் தேர்வு

பிரிட்டனின் புதிய பிரதமாராக போரிஸ் ஜான்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பிரிட்டனின் புதிய பிரதமாராக போரிஸ் ஜான்சன் தேர்வு
x
பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை பிரிட்டன் எம்பி-க்கள் ஏற்க மறுத்து விட்டதையடுத்து பிரதமர் பதவியிலிருந்து தெரசா மே கடந்த ஜூன் மாதம் ராஜினாமா செய்தார். இதனையடுத்து ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் புதிய தலைவர் மற்றும் பிரிட்டன் பிரதமரை தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்றன. பிரதமர் பதவிக்கு, முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் போரிஸ் ஜான்சன் மற்றும் வெளியுறவு துறை உயரதிகாரியான, ஜெர்மி ஹன்ட் ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவியது. இந்நிலையில், ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் சார்பாக நடந்த போட்டியில் ஜெர்மி ஹண்ட்டை வென்று பிரிட்டனின் புதிய பிரதமராக போரிஸ் ஜான்சன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இது குறித்து கருத்து கூறியுள்ள போரிஸ் ஜான்சன் பிரதமர் பதவிக்காக நடந்த போட்டியில் வென்றது மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்