உலகின் பாரம்பரிய சின்னங்களின் பட்டியலில் 'ஜெய்ப்பூர்'

அரண்மனைகள் நிறைந்த ராஜஸ்தானின் தலைநகர் ஜெய்ப்பூர் பிங்க் சிட்டி என அழைக்கப்படுகிறது.
உலகின் பாரம்பரிய சின்னங்களின் பட்டியலில் ஜெய்ப்பூர்
x
உலகின் பாரம்பரிய சின்னங்களின் பட்டியலில் 'ஜெய்ப்பூர்'



அரண்மனைகள் நிறைந்த ராஜஸ்தானின் தலைநகர் ஜெய்ப்பூர் பிங்க் சிட்டி என அழைக்கப்படுகிறது. பாரம்பரியத்தை அங்கீகரிக்கும் வகையில், உலகின் பாரம்பரிய சின்னங்களின் பட்டியலில் ஜெய்ப்பூரை சேர்த்துள்ளது யுனெஸ்கோ. இதற்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ள பிரதமர் மோடி, "ஜெய்ப்பூர் கலாச்சாரம் மற்றும் வீரம் சம்பந்தப்பட்ட ஒரு நகரம் என்று புகழாரம் சூட்டியுள்ளார். ஆற்றல் மிக்க, ஜெய்ப்பூரின் விருந்தோம்பல் எல்லா இடங்களிலிருந்தும் மக்களை ஈர்க்கிறது என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். 

தலாய்லாமா 84வது பிறந்தநாள் விழா



தலாய் லாமாவின் 84வது பிறந்தநாளை இந்தியாவில் வாழும் திபெத் மக்கள் வெகு விமர்சையாக கொண்டாடினர். தர்மசாலா, டெல்லி என நாட்டின் பல இடங்களில், பாரம்பரிய நடனம், கேக் வெட்டுதல் என கொண்டாட்டம் களைகட்டியது. 

மனைவியை கணவர் தூக்கி கொண்டு ஓடும் போட்டி



மனைவியை கணவர் தூக்கி கொண்டு ஓடும் போட்டி பின்லாந்தின் SONKAJARVI பகுதியில் நடைபெற்றது. பல்வேறு தடைகளை தாண்டி, மனைவிகளை தூக்க முடியாமல் தூக்கி கொண்டு கணவர்கள் ஓடினர். 

கஜகஸ்தான் அதிபருக்கு எதிராக மக்கள் போராட்டம்



கஜகஸ்தான் அதிபருக்கு எதிராக மக்கள் நடத்திய போராட்டத்தில் மோதல் வெடித்தது. தலைநகர் நுர் சுல்தானில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி சென்றது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. 

பஞ்சாப் : சின்னஞ் சிறுவர்களின் 'பேஷன் ஷோ'



பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் சின்னஞ் சிறுவர்களான ஆடை அலங்கார அணிவகுப்பு நடைபெற்றது. கண்கவர் உடைகளில் சிறுவர், சிறுமியர்களின் அழகு நடை பார்வையார்களை வெகுவாக கவர்ந்தது. 



Next Story

மேலும் செய்திகள்