பிரான்ஸில் 45 டிகிரி செல்சியஸ் - வரலாறு காணாத வெப்பம்
பிரான்ஸின் தென் பகுதியில் அமைந்துள்ள கிராமங்களில் நேற்று அதிகபட்சமாக 45 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது.
பிரான்ஸின் தென் பகுதியில் அமைந்துள்ள கிராமங்களில் நேற்று அதிகபட்சமாக 45 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. எதிர்பாராத வெப்பநிலை உயர்வு காரணமாக 4000-க்கும் மேற்பட்ட பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், தேர்வுகள் அடுத்த வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இதுவரை இல்லாத அளவிற்கு உலகின் அதிகபட்ச வெப்பம், கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரையிலான ஐந்தாண்டுகளில் பதிவாகியுள்ளதாக உலக வானிலை அமைப்பு தெரிவித்துள்ளது. இதில் இந்த ஆண்டே அதிக வெப்பம் நிறைந்தது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Next Story