பிரதமர் மோடி - அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்திப்பு

அமெரிக்கா அதிபர் ட்ரம்ப், பிரதமர் மோடி இருவரும் ஜப்பானில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
பிரதமர் மோடி - அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்திப்பு
x
ஜி - 20 நாடுகளின் கூட்டம், கிழக்கு ஆசிய நாடான ஜப்பானின், ஒசாகா நகரில் நடக்கிறது. இரண்டு நாள் நடக்கும் இந்த கூட்டத்தில், ஜி - 20 அமைப்பில் உள்ள, அமெரிக்கா, ரஷ்யா, சீனா, ஜப்பான், இந்தியா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர். இந்த மாநாட்டுக்கு இடையே, உலக தலைவர்கள் தனித்தனியாக சந்தித்து, இரு தரப்பு உறவுகள் குறித்தும், சர்வதேச பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்க உள்ளனர். அதன் தொடர்ச்சியாக பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டெனால்டு டிரம்பை   சந்தித்து பேசினார். அப்போது வரி விதிப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் இருவரும் ஆலோசித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்