தற்கொலை படையை சேர்ந்தவரின் உடலை புதைக்க எதிர்ப்பு
இலங்கையில் குண்டுவெடிப்பு நிகழ்த்திய தற்கொலை படையை சேர்ந்த ஒருவரின் உடல், உடற்கூறு ஆய்வுக்கு பின் மட்டகளப்பு புதுநகர் ஆலையடிச்சோலை மயானத்தில் அடக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது.
இலங்கையில் குண்டுவெடிப்பு நிகழ்த்திய தற்கொலை படையை சேர்ந்த ஒருவரின் உடல், உடற்கூறு ஆய்வுக்கு பின் மட்டகளப்பு புதுநகர் ஆலையடிச்சோலை மயானத்தில் அடக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதனை அறிந்த பொதுமக்கள், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில், தற்கொலை படையை சேர்ந்தவரின் உடல் அங்கு புதைக்கப்பட மாட்டாது என உறுதியளித்துள்ளனர். இதனையடுத்து ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.
Next Story