ஈஸ்டர் தினத்தில் நடைபெற்ற தாக்குதலுக்கு பொறுப்பேற்று பதவி விலக ஜனாதிபதி வலியுறுத்தினார் - காவல்துறை தலைவர் பூஜித்

இலங்கையில் ஈஸ்டர் தினத்தில் நடைபெற்ற தாக்குதலுக்கு பொறுப்பேற்று பதவி விலகுமாறு ஜனாதிபதி வலியுறுத்தியதாக போலீஸ் அதிகாரி வாக்குமூலம் அளித்துள்ளார்.
ஈஸ்டர் தினத்தில் நடைபெற்ற தாக்குதலுக்கு பொறுப்பேற்று பதவி விலக ஜனாதிபதி வலியுறுத்தினார் - காவல்துறை தலைவர் பூஜித்
x
இலங்கையில்,  ஈஸ்டர் தினத்தில் நடைபெற்ற தாக்குதலுக்கு பொறுப்பேற்று பதவி விலகுமாறு ஜனாதிபதி வலியுறுத்தியதாக போலீஸ் அதிகாரி வாக்குமூலம் அளித்துள்ளார்.  ஈஸ்டர் தாக்குதல் குறித்து ஆராயும் நாடாளுமன்ற சிறப்பு குழுவின் மூன்றாவது அமர்வு முன், காவல்துறை தலைவர் பூஜித் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். அப்போது,  ஈஸ்டர் தாக்குதலுக்கு பின்னர் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன  தன்னை அழைத்து, காவல்துறை தலைவர் என்ற வகையில் தாக்குதலுக்கு பொறுப்பேற்று பதவி விலக வலியுறுத்தியதாக கூறியுள்ளார். அதன் பின்னர்  கட்டாய விடுமுறை வழங்கப்பட்டதாகவும், பதவி விலகினால் இலங்கை அரசாங்கத்தில் தூதர் பதவி உள்ளிட்ட உயர் பதவி வழங்குவதாக ஜனாதிபதி தெரிவித்ததாக சாட்சியத்தில் பூஜித் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்