ராணுவ செலவை குறைத்து கொள்ள பாக். ராணுவம் இசைவு

பட்ஜெட்டில் ராணுவத்துக்கு ஒதுக்கப்படும் தொகையை குறைத்துக் கொள்ள, பாகிஸ்தான் ராணுவம், இசைவு தெரிவித்துள்ளது.
ராணுவ செலவை குறைத்து கொள்ள பாக். ராணுவம் இசைவு
x
பட்ஜெட்டில் ராணுவத்துக்கு ஒதுக்கப்படும் தொகையை குறைத்துக் கொள்ள, பாகிஸ்தான் ராணுவம், இசைவு தெரிவித்துள்ளது. ராணுவத்தின் இந்த முடிவுக்கு அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் நன்றி தெரிவித்துள்ளார். இதனால் கிடைக்கும் நிதி பலூசிஸ்தான் மற்றும் எல்லைப்புற மாகாண வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படும் எனவும் இம்ரான்கான் தெரிவித்துள்ளார். சர்வதேச நிதியத்தில் பாகிஸ்தான் 6 பில்லியன் டாலர் கடன் வாங்க இருந்த நிலையில், பட்ஜெட் மற்றும் நடப்பு கணக்கு பற்றாக்குறை அளவை காரணம் காட்டி, சர்வதேச நிதியம் கடன் வழங்க மறுத்துவிட்டது. பற்றாக்குறை 5 பில்லியன் டாலர் அளவுக்கு இருக்க வேண்டும் என்ற நிலையிலும், பாகிஸ்தானுக்கான அமெரிக்க உதவி சுமார் ஒன்று புள்ளி ஒன்று பில்லியன் ரத்து செய்யப்பட்ட நிலையில், பாகிஸ்தான் ராணுவத்தின் நடவடிக்கை அங்கு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. கடந்த ஆண்டு பாகிஸ்தான் ராணுவத்துக்கு பட்ஜெட்டில் சுமார் 45 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டது. இந்தியாவில் கடந்த ஆண்டு பட்ஜெட் ஒதுக்கீடு சுமார் 3 லட்சம் கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்