ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் பறக்கும் கார்
அமெரிக்காவின், கலிபோர்னியா மாகாணத்தில் ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் பறக்கும் கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவின், கலிபோர்னியா மாகாணத்தில் ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் பறக்கும் கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஸ்கை என பெயரிடப்பட்டுள்ள இந்த பறக்கும் காரை அலக்கா' ஐ டெக்னாலஜிஸ் என்ற நிறுவனம் அறிமுகப்படுத்தியது. போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் விதமாகவும், சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையிலும் இயங்குவதற்கு ஏற்றவாறு இது வடிவமைக்கப்பட்டுள்ளது. 5 பேர் அமரக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த பறக்கும் கார், ஆளில்லா விமானம் மற்றும் ஹெலிகாப்டர் தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. 644 கிலோ மீட்டர் தூரத்திற்கு பறக்கும் வல்லமை கொண்ட இந்த கார், 454 கிலோ எடை சுமந்து செல்லும் திறன் உடையது என்றும், இதை ஆம்புலன்சாக பயன்படுத்தலாம் என்றும் அலக்கா' ஐ நிறுவனம் தெரிவித்துள்ளது.
Next Story