சவூதி அரேபியாவின் குற்றச்சாட்டுகள் ஆதராமற்றவை : ஈரான் வெளியுறவுத்துறை திட்டவட்ட மறுப்பு

சவூதி எண்ணெய் வளங்கள் உள்ள பகுதியில் ஈரான் தாக்குதல் நடத்தியதாக அந்நாட்டு மன்னர் தெரிவித்த குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது என ஈரான் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
சவூதி அரேபியாவின் குற்றச்சாட்டுகள் ஆதராமற்றவை : ஈரான் வெளியுறவுத்துறை திட்டவட்ட மறுப்பு
x
வளைகுடாவில் உள்ள எண்ணெய் வளங்கள் மீது இந்த மாத தொடக்கத்தில் ஈரான் தாக்குதல் நடத்தியதாக குற்றம்சாட்டியுள்ள சவூதி அரேபியா அந்நாடு மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக அரபு நாடுகள் கூட்டமைப்பின் 3 நாள் அவசர கூட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது. நேற்று தொடங்கிய இந்த மாநாட்டில் ஈரான் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக, அரபு நாடுகள் கூட்டமைப்பை, சவூதி மன்னர் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அமெரிக்கா மற்றும் ஐ.நா.வுக்கும் சவூதி வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்நிலையில், சவூதி அரேபியாவின் இந்த குற்றச்சாட்டை ஈரான் திட்டவட்டமாக மறுத்துள்ளது. பாதுகாப்பு தொடர்பாக எடுக்கும் இந்த நடவடிக்கைகள் வளைகுடா பிராந்தியத்தின் நலன் சார்ந்தது என்று தெரிவித்துள்ளது. மேலும், எண்ணெய் வளங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள ஈரான், இந்த பிராந்தியத்தில் ஈரானை தனிமைப்படுத்தும் அமெரிக்க மற்றும் இஸ்ரேல் நாடுகளின் செயலுக்கு சவூதி அரேபியா துணை போவதாகவும் குற்றம்சாட்டியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்