அரிப்பு பொடி தூவி ரூ.6 லட்சம் கொள்ளை - தொடர் கொள்ளையில் ஈடுபட்டவர் கைது
புதுச்சேரி மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த சாந்திமதி என்பவர் வங்கியில் இருந்து 6 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு சென்றுள்ளார்.
புதுச்சேரி மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த சாந்திமதி என்பவர் வங்கியில் இருந்து 6 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு சென்றுள்ளார். வீட்டுக்கு சென்றவுடன் அவருக்கு உடல் முழுவதும் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பணத்தை அறையில் இருந்த கட்டில் மீது வைத்து விட்டு குளிக்க சென்றுள்ளார். அப்போது வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள் பணத்தை கொள்ளையடுத்து சென்றுள்ளனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், முருகானந்தம் என்பரை கைது செய்தனர். முருகானந்தம் இதேபோல் பலர் மீது அரிப்பு பொடியை தூவி பணத்தை கொள்ளையடித்துள்ளது விசாரணையில் தெரியவந்தது.
Next Story