அணுசக்தி ஒப்பந்தத்தில் மூவர் அணி - டிரம்ப் பேட்டி
அணுசக்தி ஒப்பந்தத்தில் அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுடன் இணைந்து செயல்பட சீனா விருப்பம் தெரிவித்துள்ளதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அணுசக்தி ஒப்பந்தத்தில் அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுடன் இணைந்து செயல்பட சீனா விருப்பம் தெரிவித்துள்ளதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க தலைநகரான வாஷிங்டனில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தொலைபேசி வாயிலாக ரஷ்ய அதிபர் புதினுடன் சுமார் ஒரு மணி நேரம் கலந்துரையாடியதாக கூறினார். இதில் 20 ஆண்டு முன்னர் பணக்கார நாடுகளுள் ஒன்றாக இருந்த வெனிசூலாவில் தற்போது உண்ண உணவு குடிக்க தண்ணீரின்றி தவித்து வருவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக குறிப்பிட்டார். மனிதாபிமான அடிப்படையில் வெனிசூலாவிற்கு உதவ இரு நாடுகளும் முடிவு எடுத்துள்ளதாக தெரிவித்து டிரம்ப், வட கொரியா குறித்தும் நீண்ட நேரம் ஆலோசனை செய்ததாகவும் தெரிவித்தார்.
Next Story