136 பேருடன் ஆற்றுக்குள் இறங்கிய விமானம்
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் 136 பேருடன், ஆற்றுக்குள் விமானம் இறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் 136 பேருடன், ஆற்றுக்குள் விமானம் இறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. அமெரிக்காவின் கவுண்டனாமா வளைகுடா பகுதியில் இருந்து 136 பேருடன் 'போயிங் 737' ரக விமானம் ஒன்று புறப்பட்டது. புளோரிடா மாகாணத்தில் உள்ள செயின்ட் ஜான்ஸ் ஆற்றின் அருகே வந்தபோது, கடும் சூறாவளி மற்றும் மோசமான வானிலை காரணமாக, அவசரம் அவசரமாக, ஆற்றுக்குள், அந்த விமான தரை இறக்கப்பட்டது. எனினும், விமானத்தில் இருந்த பயணிகள் அதிர்ஷ்டவசதாக தப்பினர். இரண்டு பேருக்கு மட்டும் லேசான காயம் ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து தகவலறிந்ததும் அதிபரி டிரம்ப், புளோரிடா மாகாண மேயர் லேனி கேரியை தொடர்பு கொண்டு விசாரித்தார்.
Next Story