"ஆளுநர்கள், அமைச்சர் மீது விசாரணை தேவை" - இலங்கை அதிபரிடம் பொதுபல சேனா அமைப்பு வலியுறுத்தல்
தீவிரவாதிகளுடன் தொடர்பிருப்பதாக சந்தேகிக்கப்படுகின்ற மாகாண ஆளுநர்கள் மற்றும் அமைச்சர்கள் மீது உடனடியான விசாரணை நடத்தும்படி இலங்கை அதிபரிடம் பொதுபல சேனா அமைப்பு கோரிக்கை வைத்துள்ளது.
தீவிரவாதிகளுடன் தொடர்பிருப்பதாக சந்தேகிக்கப்படுகின்ற மாகாண ஆளுநர்கள் மற்றும் அமைச்சர்கள் மீது உடனடியான விசாரணை நடத்தும்படி இலங்கை அதிபரிடம் பொதுபல சேனா அமைப்பு கோரிக்கை வைத்துள்ளது. கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய அந்த அமைப்பின் பிரதிநிதிகள் இந்த கருத்தை வெளியிட்டனர். கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா, மேல் மாகாண ஆளுநர் அசாத்சாலி மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாத் பதியூதீன் ஆகியோரை பதவிநீக்கம் செய்யுமாறு பொதுபல சேனா அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
Next Story