முன்னாள் அதிகாரிகளுக்கு மீண்டும் முக்கிய பதவிகள் - நியமன கடிதங்களை வழங்கினார், அதிபர் மைத்திரிபால் சிறிசேன

இலங்கையின் புதிய பாதுகாப்புச் செயலாளராக ஓய்வுபெற்ற முன்னாள் ராணுவ தளபதி கோட்டேகொட நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் அதிகாரிகளுக்கு மீண்டும் முக்கிய பதவிகள் -  நியமன கடிதங்களை வழங்கினார், அதிபர் மைத்திரிபால் சிறிசேன
x
இலங்கையில் கடந்த வாரம் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவங்கள் அந்த நாட்டையே உலுக்கியது. ஒரு நாளோடு இந்த குண்டுவெடிப்பு சம்பவங்கள் நின்றுவிடவில்லை, தேடுதல் வேட்டைகளின் போதும் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்தன.பல்வேறு இடங்களில் வெடிகுண்டுகள், குண்டுகள் தயாரிக்க பயன்படும் ரசாயனங்களும், டெட்டனேட்டர்களும் தொடர்ந்து கைப்பற்றப்பட்டு வருகின்றன. இந்த சம்பவங்களுக்கு உளவுத்துறை மற்றும் காவல்துறையின் திறனற்ற செயல்பாடுகளே காரணமென விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில், திறமை வாய்ந்த முன்னாள் அதிகாரிகள் பலரை அந்நாட்டு அதிபர் மைத்திரிபால சிறிசேன மீண்டும் அதிகாரப்பதவிகளில் அமர்த்தியிருக்கிறார். புதிய பாதுகாப்பு துறை செயலராக முன்னாள் ராணுவ தளபதி ஜெனரல்  கோட்டேகொட நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தாய்லாந்திற்கான இலங்கை தூதராக பணியாற்றி வந்தவர். புதிய தலைமை  நீதிபதியாக ஜயந்த ஜயசூரியாவையும் சொலிசிட்டர் ஜெனரலாக தப்புல டி லிவேரா ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளார்கள். பாதுகாப்பு அமைச்சகத்தின் ஆலோசகராக முன்னாள் காவல்துறை தலைவர் இளங்ககோன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.இதை போல, தலைமை கணக்காய்வாளரையும் மாற்றி, அந்நாட்டு அதிபர் மைத்திரி பால சிறிசேன உத்தரவிட்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்