கருத்து வேறுபாடுகளை கைவிட்டு சமாதானம் நிலவ ஒருங்கிணைய வேண்டும் - இலங்கை அதிபர்

கருத்து வேறுபாடுகளை கைவிட்டு, சமாதானம் நிலவ ஒருங்கிணைய வேண்டும் என்று அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்தில் இலங்கை அதிபர் வலியுறுத்தி உள்ளார்.
கருத்து வேறுபாடுகளை கைவிட்டு சமாதானம் நிலவ ஒருங்கிணைய வேண்டும் - இலங்கை அதிபர்
x
இலங்கையில் தொடர் குண்டுவெடிப்பால் நிலவும் பதற்றத்தை தணிக்கவும், நாட்டில் அமைதி நிலவ எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், அதிபர் சிறிசேன தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க் கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சே, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட ஏராளமான அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும், தலைவர்களும் கலந்து கொண்டனர்.  இலங்கையின் தற்போதைய சூழ்நிலை மற்றும் அது தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து  இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. அப்போது ​பேசிய அதிபர் சிறிசேன, அரசியல் கருத்துக்களையும் நோக்கங்களையும் புறம் தள்ளி பொதுமக்களின் நலனுக்காக நாட்டில் சமாதானமான நிலைமையை கொண்டு வர அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என அனைத்து கட்சி தலைவர்களை கேட்டுக் கொண்டார். 

Next Story

மேலும் செய்திகள்