இலங்கை குண்டுவெடிப்பு: "வெளிநாட்டினர் 11 பேர் அடையாளம் தெரிந்தது" - இலங்கை வெளியுறவுத்துறை தகவல்

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களில் வெளிநாட்டினர் 11 பேர் அடையாளம் கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டு வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.
இலங்கை குண்டுவெடிப்பு: வெளிநாட்டினர் 11 பேர் அடையாளம் தெரிந்தது - இலங்கை வெளியுறவுத்துறை தகவல்
x
இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களில் வெளிநாட்டினர் 11 பேர் அடையாளம் கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டு வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. கொழும்பு, நெகோம்போ, பட்டிகேலா ஆகிய இடங்களில் நடந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்து, கொழும்பு தேசிய மருத்துவமனையில் உள்ள சடலங்களில் இந்தியாவை சேர்ந்த 3 பேர், போர்ச்சுகலை சேர்ந்த ஒருவர், துர்க்கியை சேர்ந்த 2 பேர், இங்கிலாந்தை சேர்ந்த 3 பேர் மற்றும் அமெரிக்காவை சேர்ந்த 2 பேர் என மொத்தம் 11 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும் 25 சடலம் வெளிநாட்டினராக இருக்கலாம் என கருதுவதாகவும் வெளிநாட்டினர் 9 பேரை காணவில்லை என புகார் வந்துள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்