இலங்கையில் நடந்த முக்கிய குண்டுவெடிப்பு சம்பவங்கள்

இலங்கையில் நடந்த முக்கிய குண்டு வெடிப்பு சம்பவங்களை தற்போது பார்க்கலாம்...
இலங்கையில் நடந்த முக்கிய குண்டுவெடிப்பு சம்பவங்கள்
x
கடந்த 1994 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இலங்கை வடமேற்கு மாகாணம் மன்னார் பகுதியில் நடந்த குண்டு வெடிப்பில் 25 பேர் பலியானர்கள். 1996 ஜூலை மாதம் மேற்கு மாகாணம் டெகிவாலா ரயில் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 64 பேர் உயிரிழந்தனர். அதே ஆண்டு தலைநகர் கொழும்பில் மத்திய வங்கியில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் 91 பேர் பலியானார்கள். 1998 ஆம் ஆண்டு கண்டியில் உள்ள புத்த ஆலயத்தில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில் 15 பேர் பலி ஆனார்கள். 2001 ஆம் ஆண்டு மேற்கு மாகாணம் பண்டாரநாயகா விமான நிலையத்தில் நடந்த குண்டுவெடிப்பில் 16 பேர் உயிரிழந்தனர். 2006ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் திக்கம்பத்னா குண்டுவெடிப்பு சம்பத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகினர். 2008 ஆம் ஆண்டு பேருந்து மற்றும் ரயில் நிலையங்கள் உள்ளிட்ட 3 வெவேறு இடங்களில் நடந்த குண்டு வெடிப்பில் 64 பேர் உயிரிழந்தனர். இலங்கையில் கடந்த 1980 -ஆம் ஆண்டு முதல் 2000 -ஆம் ஆண்டு வரை 198 தற்கொலை படை தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மேலும் செய்திகள்