இந்தியாவுக்கான வர்த்தக சலுகையை பறிக்க டிரம்ப் முடிவு - 60 நாள் நோட்டீஸ் கொடுத்தது அமெரிக்கா

1970-களில் பொருளாதாரத்தில் வளர்ந்து வரும் நாடாக திகழ்ந்து வந்த இந்தியாவை அமெரிக்கா ஜி.எஸ்.பி. என்று அழைக்கப்படுகிற பொதுவான முன்னுரிமை திட்டத்தின் கீழ் சேர்த்தது.
இந்தியாவுக்கான வர்த்தக சலுகையை பறிக்க டிரம்ப் முடிவு - 60 நாள் நோட்டீஸ் கொடுத்தது அமெரிக்கா
x
1970-களில் பொருளாதாரத்தில் வளர்ந்து வரும் நாடாக திகழ்ந்து வந்த இந்தியாவை அமெரிக்கா ஜி.எஸ்.பி. என்று அழைக்கப்படுகிற பொதுவான முன்னுரிமை திட்டத்தின் கீழ் சேர்த்தது. இதனால் 2017-ம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் இருந்து அமெரிக்கா 40 ஆயிரத்து 470 கோடி பொருட்களை சுங்க வரி விதிக்காமல் இறக்குமதி செய்தது. இந்த நிலையில் ஜி.எஸ்.பி. திட்டத்தின் கீழ், இந்தியாவுக்கு வழங்கி வரும் வரி சலுகையை முடிவுக்கு கொண்டுவர எண்ணி உள்ளதாக அமெரிக்க நாடாளுமன்றத்தில் அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இதையொட்டி இந்தியாவுக்கு அமெரிக்கா 60 நாள் நோட்டீஸ் வழங்கியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இந்தியாவுக்கு வழங்கி வருகிற வர்த்தக சலுகையை டிரம்ப் தொடர்ந்து வழங்க வேண்டும் என்று அமெரிக்க-இந்திய வர்த்தக கவுன்சில் வலியுறுத்தி உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்