"வளரும் நாடுகளுக்கான முன்னுரிமை பட்டியலில் இருந்து இந்தியாவை நீக்க நேரிடும்" - டிரம்ப்

வளரும் நாடுகளுக்கான முன்னுரிமை பட்டியலில் இருந்து இந்தியாவை நீக்க நேரிடும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
வளரும் நாடுகளுக்கான முன்னுரிமை பட்டியலில் இருந்து  இந்தியாவை நீக்க நேரிடும் - டிரம்ப்
x
அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியாவை உச்சபட்ச வரி விதிக்கும் நாடு என விமர்சித்துள்ளார். அமெரிக்காவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும், இருசக்கர வாகனங்களுக்கு இந்தியாவில் 100 சதவிகிதம் வரி விதிக்கப்படுவதாகவும், இந்தியாவிடம் இருந்து இறக்குமதி ஆகும், வாகனங்களுக்கு, அமெரிக்கா எந்த வரியும் விதிப்பதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்க பொருட்கள் மீது அதிக வரி விதிப்பது, அமெரிக்காவை அவமதிக்கும் செயல் என்றும் டிரம்ப் கூறியுள்ளார். ஹார்லி டேவிட்சன் இருசக்கர வாகனத்திற்கு 100 சதவிதம் வரி விதிக்கப்பட்ட நிலையில், அமெரிக்காவின் அழுத்தத்தை தொடர்ந்து, அதனை 50 சதவிகிதமாக குறைத்தது போதுமானதாக இல்லை என்றும், டிரம்ப் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்