பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வரலாறு....

தீவிரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றிய முக்கியமான தகவல்கள்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வரலாறு....
x
* இந்தியாவும், பாகிஸ்தானும் சுதந்திரம் பெற்ற பிறகு இரு நாடுகளுக்கும் இடையே  கடந்த 1947 ஆம் ஆண்டு, முதல் போர் நடந்தது. அப்போது, இந்து மன்னர் ஹரிசிங் ஆண்டு வந்து ஜம்மு-காஷ்மீர் மாகாணத்தின் சில பகுதிகளை  பாகிஸ்தான் ஆக்கிரமித்தது. இதனால், இந்தியாவுடன், காஷ்மீரை இணைக்க மன்னர் ஹரிசிங் முன்வந்தார். இதையடுத்து, பாகிஸ்தான் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. 

* ஓராண்டுக்கு மேலாக நீடித்த இந்தப் போரின் முடிவில், காஷ்மீர் பள்ளத்தாக்கு, ஜம்மு, லடாக் ஆகிய பகுதிகள் இந்தியா வசமும், ஆசாத் காஷ்மீர், கில்ஜித், பல்திஸ்தான் ஆகிய பகுதிகள் பாகிஸ்தான் வசமும் சென்றன. போர் நிறுத்த நடவடிக்கையை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையேயான எல்லையை ஐக்கிய நாடுகள் சபை வரையறை செய்தது. ஆசாத் ஜம்மு காஷ்மீர் அல்லது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீராக இருந்துவரும் அப்பகுதி,  பாகிஸ்தானின் தன்னாட்சி பெற்ற மாநிலமாக உள்ளது. இதன் தலைநகரம் முசாஃபராபாத்.

* மொத்தம் 13 ஆயிரத்து 297 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி மொத்தம் 40 லட்சத்து 45 ஆயிரத்து 366 பேர் வசிக்கின்றனர். இங்கு குஜார் இன மக்கள் அதிகமாக வாழ்கின்றனர். சுதான், ராஜ்புத், ஜாட், அப்பாசி, காஷ்மீரி உள்ளிட்ட இன மக்களும் வசித்து வருகின்றனர்.
இங்கு வசிக்கும் பெரும்பாலானோர் முஸ்லிம்களே. மாநிலத்தின் அலுவல் மொழி உருது. இதைத் தொடர்ந்து காஷ்மீரி, பஞ்சாபி, கோஷ்ரி உள்ளிட்ட மொழிகள் பரவலாகப் பேசப்படுகிறது.

* இங்கு விவசாயமே முக்கிய தொழில். பார்லி, மாங்காய், கம்பு, சோளம், கோதுமை உள்ளிட்டவை பிரதானமாக பயிரிடப்படுகின்றன. காஷ்மீருக்குள் ஊடுருவவும், தாக்குதல் நடத்தவும் வசதியாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லைப் பகுதியில் ஆங்காங்கே முகாம்களை அமைத்து, ஜெய்ஷ்- இ-முகமது, ஹிஸ்புல் முஹாதீன் உள்ளிட்ட தீவிரவாத இயக்கங்கள் செயல்பட்டு வருகின்றன. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் உருவானது முதல், அப்பகுதி மக்கள், பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறலுக்கு எதிராக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்