உலக வங்கித் தலைவர் டேவிட் மால்பாஸ்? - அதிபர் டிரம்ப் பரிந்துரை
உலக வங்கி தலைவராக இருந்த ஜிம் யாங் கிம் பதவி விலகியதை அடுத்து, அந்தப் பதவிக்கு அமெரிக்காவில் கருவூல செயலாளராக இருந்து வரும் டேவிட் மால்பாஸை பரிந்துரைக்க, அதிபர் டிரம்ப் முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
உலக வங்கி தலைவராக இருந்த ஜிம் யாங் கிம் பதவி விலகியதை அடுத்து, அந்தப் பதவிக்கு அமெரிக்காவில் கருவூல செயலாளராக இருந்து வரும் டேவிட் மால்பாஸை பரிந்துரைக்க, அதிபர் டிரம்ப் முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏற்கனவே இந்தப் பதவிக்கு பெப்ஸிகோ நிறுவனத்தின் சி.இ.ஓ.,வாக இருந்த இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த இந்திரா நூயி மற்றும் டிரம்பின் மகள் ஆகியோரது பெயர்கள் பரிந்துரையில் இருந்தது. உலக வங்கி தலைவர் பதவிக்கு டிரம்ப் நேரடியாக ஒருவரை நியமிக்க முடியாது. உலக வங்கி நிர்வாக குழு ஒப்புதல் அளிக்க வேண்டும். ஆனால், அமெரிக்க அதிபர் நியமனத்துக்கு வங்கி நிர்வாகம் ஒப்புதல் அளிப்பது வழக்கமான நடைமுறையாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story