பல ஆயிரம் ஆண்டுகள் பழையான மம்மிகள் : 50 பதப்படுத்தப்பட்ட உடல்கள் கண்டெடுப்பு
எகிப்தில் கி.மு. 305ம் ஆண்டுக்கும் கி.மு. 330-ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தை சேர்ந்த சுமார் 50 பதப்படுத்தப்பட்ட உடல்களை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
எகிப்தில் கி.மு. 305ம் ஆண்டுக்கும் கி.மு. 330-ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தை சேர்ந்த சுமார் 50 பதப்படுத்தப்பட்ட உடல்களை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். எகிப்து தலைநகர் கெய்ரோவுக்கு தெற்கே உள்ள மின்யா நகரில் 30 அடி ஆழத்தில் கண்டெடுக்கப்பட்ட இந்த மம்மிகளில், 12 உடல்கள் குழந்தைகளின் உடல்கள் என்பது கண்டறியப்பட்டுள்ளது. கல் மற்றும் மரங்களால் ஆன சவப்பெட்டிகளில் துணிகளால் இந்த உடல்கள் மூடப்பட்டுள்ளன. இந்த உடல்கள் குறித்து, தொடர்ந்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.
Next Story