"அரசியல் விளம்பரங்களை வெளியிட கட்டுப்பாடு" - கூகுள்
அரசியல் விளம்பரங்கள் வெளியிட, 'கூகுள்' புதிய கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.
அரசியல் விளம்பரங்கள் வெளியிட, 'கூகுள்' புதிய கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. 'கூகுள்' நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவுக்கென, புதிய விளம்பரக் கொள்கை வகுத்துள்ளதாகவும், அரசியல் விளம்பரங்களை வெளியிடுவோர், தேர்தல் கமிஷன் அல்லது அங்கீகரிக்கப்பட்ட அமைப்பிடம் இருந்து, சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விளம்பரதாரர் விபரம், அதற்கான செலவு குறித்து, வெளிப்படையாக தெரிவிக்கப்படும். விளம்பரதாரர்களின் அடையாளத்தை உறுதி செய்த பின்பே, விளம்பரம் வெளியிடப்படும் என்று, 'கூகுள்' நிறுவனம் தெரிவித்துள்ளது.
Next Story