இஸ்லாமிய மத போதகர் ஷாகிர் நாயக் சொத்துகள் பறிமுதல்
இஸ்லாமிய மத போதகர் ஷாகிர் நாயக்கின் சொத்துகளை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது.
இஸ்லாமிய மத போதகர் ஷாகிர் நாயக்கின் சொத்துகளை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது. பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டுள்ள இந்த சொத்துகளில் மதிப்பு 16 கோடியே 40 லட்ச ரூபாய் என்றும், அவரது இஸ்லாமிய ஆய்வு நிறுவனம் பல்வேறு வழிகளில் சட்ட விரோதமாக நிதி திரட்டியது விசாரணையில் தெரிய வந்துள்ளதாகவும் அமலாக்கத்துறை கூறியுள்ளது. இந்தியாவில் மத வெறுப்பு பிரச்சாரம் செய்வதாக ஷாகிர் நாயக் மீது தொடுக்கப்பட்ட பல்வேறு வழக்குகளில்,
ஜாமீனில் வெளிவர முடியாத பிடி வாரன்டை மும்பை சிறப்பு தேசிய புலனாய்வு நீதிமன்றம் பிறப்பித்துள்ள நிலையில், அவர் தற்போது மலேசியாவில் வசித்து வருகிறார்.
Next Story