பிரேசிலில் இனி துப்பாக்கி வாங்குவது சுலபம் : தனி நபர் 4 துப்பாக்கிகள் வாங்க அனுமதி
பிரேசிலில் புதிய அதிபராக ஜெயர் போல்சரோ, துப்பாக்கி வாங்கும் சட்டத்தை சுலபமாகியுள்ளார்.
பிரேசிலில் புதிய அதிபராக ஜெயர் போல்சரோ, துப்பாக்கி வாங்கும் சட்டத்தை சுலபமாகியுள்ளார். இதற்கு முன்னர் தனி நபர் அதிகபட்சமாக இரண்டு துப்பாக்கிகள் வாங்கி கொள்ளலாம் என்றிருந்த சட்டம்,தற்போது நான்காக அதிகரித்துள்ளது. 25 வயது முதலே எந்தவொரு குற்றப் பிண்ணணியும் இல்லாதவர்கள் எளிதில் துப்பாக்கி வாங்கி கொள்ளவதோடு, பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை துப்பாக்கி லைசன்ஸை புதுப்பித்தால் போதும் என பல சலுகைகளை இதில் இடம்பெறுகின்றன. கடந்த 2017 ஆம் ஆண்டில், பிரேசிலில் 64,000 கொலைகள், துப்பாக்கி சூடு மூலம் நடைபெற்றுள்ள நிலையில், இந்த புதிய துப்பாக்கி சட்டம் மக்களிடையே மேலும் அச்சத்தை அதிகரித்துள்ளது.
Next Story