எபோலா வைரஸால் பாதிக்கப்பட்ட தாய் : நோய் தொற்றின்றி பிறந்த முதல் குழந்தை
காங்கோ என்ற ஆப்பிரிக்க நாட்டில் எபோலா நோயால் பாதிக்கப்பட்ட தாயிற்கு ஆரோக்கியமான குழந்தை பிறந்துள்ளது.
காங்கோ என்ற ஆப்பிரிக்க நாட்டில் எபோலா நோயால் பாதிக்கப்பட்ட தாயிற்கு ஆரோக்கியமான குழந்தை பிறந்துள்ளது. ஜோஸ்பின் என்ற ஆப்பிரிக்க பெண்மணி கடந்த டிசம்பர் மாதம் எபோலா நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு ஐநா சுகாதாரத் துறையின் சிறப்பு முகாம் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது. பொதுவாக எபோலா நோயால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு பிறக்கும் குழந்தை நோய் தொற்று காரணமாக உயிரிழந்துவிடும். இந்நிலையில், ஜோஸ்பினுக்கு பிறந்துள்ள குழந்தை எபோலா நோய் தொற்றின்றி பிறந்துள்ள முதல் குழந்தை என்று ஐநா சுகாதார துறை தெரிவித்துள்ளது.
Next Story