டயர்களுக்கு பதிலாக 4 கால்கள் கொண்ட கார் : ஹூண்டாய் கலக்கல்
அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் நடக்கும் நுகர்வோர் மின்னணு பொருட்கள் கண்காட்சியில், எலிவேட் என்ற நான்கு கால்கள் கொண்ட காரை ஹூண்டாய் அறிமுகப்படுத்துகிறது.
ஆண்டுதோறும் நடக்கும் இந்த கண்காட்சியில் நூதன பொருட்கள் மற்றும் நவீன ரக சாதனங்கள் அறிமுகப்படுத்தப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான கண்காட்சியில் டயர்களுக்கு பதிலாக 4 கால்கள் கொண்ட எலிவேட் என்ற காரை ஹூண்டாய் அறிமுகப்படுத்துகிறது. கடினமான மலை மற்றும் பள்ளத்தாக்குகளில் ஏறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கார் மீட்பு பணிகளுக்கு உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வாகனம் மற்றும் ரோபோடிக்ஸ் ஆகிய இரு தொழில்நுட்பங்களை இணைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த கால் முளைத்த கார் சாலைகளில் ஜாகிங் போகும் போது, வாகனப்போக்குவரத்தில் பெரிய புரட்சியே ஏற்படும் என்று கருதப்படுகிறது.
Next Story