புஷ்-ன் மரணத்தால் கலங்கித் தவிக்கும் அவரது செல்லப் பிராணி...

சீனியர் புஷ்-ன் மரணத்தால் கலங்கித் தவிக்கும், அவரது செல்லப் பிராணி குறித்துப் பதிவு செய்கிறது
புஷ்-ன் மரணத்தால் கலங்கித் தவிக்கும் அவரது செல்லப் பிராணி...
x
* அமெரிக்காவின் 41வது அதிபராக, 1989ம் ஆண்டு முதல் 1993ம் ஆண்டு வரை பணியாற்றிய அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் ஹெர்பெர்ட் வாக்கர் புஷ், தமது 94வது வயதில் உயிரிழந்தார். அவரது மறைவைத் தாங்கிக் கொள்ள முடியாத சோகத்தில் தவிக்கும் அவரது செல்லப்பிராணி சுல்லி, (Sully) இறுதி அஞ்சலி செலுத்தியது.

* ஜார்ஜ் ஹெச்.டபுள்யூ.புஷ் உடன் இருந்து, அவருக்கு தேவையான உதவிகளை, 'சுல்லி' செய்து வந்தது. இந்த மரணத்தை தாங்க முடியாமல் சோகத்தில் படுத்திருக்கும், நெகிழ்ச்சியான புகைப்படத்தை, 'பணி முடிந்தது'என்ற பதிவுடன் புஷ்-ன் செய்தித் தொடர்பாளர் ஜிம் மெக் க்ராத் தமது சமூக வலை தள பக்கத்தில், வெளியிட்டுள்ளார். 

* கடந்த 2009ஆம் ஆண்டு பயணிகள் விமானம் ஒன்றை ஹுண்ட்சன் ஆற்றில் இறக்கி, விமானத்தில் இருந்த 155 பயணிகள் மற்றும் பணியாளர்களை காப்பாற்றிய விமானி செல்ஸி சுல்லி சுலென்பெர்கர் நினைவாக, சீனியர் புஷ்-ன் லாப்ரெடர் நாய்க்கு, "சுல்லி" என்று பெயரிடப்பட்டது.

* அப்போது, இரண்டு வயதாக இருந்த "சுல்லி", உடல் நலக் குறைவால், தமது வாழ்வின் இறுதி நாட்களில் சக்கர நாற்காலியில் புஷ் இருக்க நேரிட்டபோது, அவருக்கு உதவி செய்வதற்காக பணியமர்த்தப்பட்டது.

* உயர் தரமான பயிற்சி அளிக்கப்பட்ட "சுல்லி", பல்வேறு கட்டளைகளை புரிந்து கொண்டு செயல்படக்கூடியது. சீனியர் புஷ்-க்கு தேவையான பொருட்களை கொண்டு வந்து கொடுப்பது, கதவை திறந்து விடுவது, போன் அடித்தால் எடுத்துக் கொடுப்பது என பல்வேறு உதவிகளை செய்துவந்தது.

* தனக்கென பிரத்யேக சமூக வலை தள கணக்கை வைத்துள்ள "சுல்லி", சீனியர் புஷ் கடந்த மாதம் நடைபெற்ற அமெரிக்காவின் இடைக்கால தேர்தலில் வாக்களிப்பதற்கு உதவி செய்தது. தற்போது, ஜார்ஜ் எச்.டபிள்யூ.புஷ் காலமாகிவிட்ட நிலையில், காயமடைந்த சிப்பாய்களுக்கு சிகிச்சையளிக்கும்போது உதவி செய்யும் பணியில் "சுல்லி" ஈடுபடுத்தப்பட உள்ளது. 

* பொதுவாக, அமெரிக்க அதிபர்களாக இருந்தவர்களுக்கு, நாய்கள் பிடித்தமானதாக இருந்ததில்லை. ஜான் எஃப்.கென்னடிக்கு நாய்கள் என்றாலே பிடிக்காது. தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்பிடம் ஒரு நாய் கூட இல்லை.

* பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சை பெற்று வந்த சீனியர் புஷ், ரத்தத்தில் தொற்று ஏற்பட்டதால் ஏப்ரம் மாதம் முதல் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார்.

* அவரது செய்தித் தொடர்பாளரான ஜிம் மெக் க்ராத் கூறுகையில், தமது இறுதிச்சடங்கிற்கு யாரேனும் வருவார்களா என  ஒருமுறை வியந்து கேட்டதாக கூறியுள்ளார்.  மனிதர்கள் வந்தார்களோ இல்லையோ... இந்த செல்லப்பிராணி உயிர் இருக்கும் வரை நினைத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Next Story

மேலும் செய்திகள்