"ஒபெக்" அமைப்பில் இருந்து கத்தார் விலகல்

கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் சர்வதேச அமைப்பான "ஒபெக்" அமைப்பில் இருந்து விலகுவதாக கத்தார் அறிவித்துள்ளது.
ஒபெக் அமைப்பில் இருந்து கத்தார் விலகல்
x
கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் சர்வதேச அமைப்பான "ஒபெக்" அமைப்பில் இருந்து விலகுவதாக கத்தார் அறிவித்துள்ளது. உலக அளவில் திரவ இயற்கை எரிவாயு ஏற்றுமதியில் முதலிடம் வகிக்கும் கத்தார், எரிவாயு ஏற்றுமதியில் கவனம் செலுத்த வருகின்ற ஜனவரி மாதம்  "ஒபெக்" அமைப்பில் இருந்து விலக போவதாக தெரிவித்துள்ளது. தீவரவாதத்திற்கு உதவுவதாக கத்தார் மீது சில அரபு நாடுகள் பொருளாதாரம், அரசியல் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் தடை விதித்திருந்தன. இந்நிலையில், ஒபெக் அமைப்பில் 57 ஆண்டுகள் உறுப்பினராக அங்கம் வகித்து வந்த கத்தார், தற்போது வெளியேற முடிவு செய்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்