பெரும்பான்மை இல்லாவிட்டால் எதிர்க்கட்சியாக இருக்க வேண்டும் - ராஜபக்சேவின் நெருங்கிய ஆதரவாளர் குமார வெல்கமா கருத்து
இலங்கை நாடாளுமன்றத்தில் 113 என்ற பெரும்பான்மையை பெற முடியாத நிலையில், எதிர் கட்சியாக செயல்பட முடிவு எடுக்க வேண்டும் என ராஜபக்சேயின் நெருங்கிய ஆதரவாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான குமார வெல்கமா தெரிவித்துள்ளார்.
இலங்கை நாடாளுமன்றத்தில் 113 என்ற பெரும்பான்மையை பெற முடியாத நிலையில், எதிர் கட்சியாக செயல்பட முடிவு எடுக்க வேண்டும் என ராஜபக்சேயின் நெருங்கிய ஆதரவாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான குமார வெல்கமா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் ராஜபக்சே ஆதரவு எம்பிக்கள் நடந்து கொண்டு முறை குறித்து கவலை தெரிவித்துள்ள அவர், சர்வதேச அளவில் அவமானகரமானது எனவும் விமர்சித்துள்ளார். நாடாளுமன்றத்திற்குள் சபாநாயகரை நுழைய விடாமல் ராஜபக்சே ஆதரவு எம்பிக்கள் தடுத்ததற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள குமார வெல்கமா, 25 ஆண்டு கால இலங்கை நாடாளுமன்ற வரலாற்றில் இப்படியொரு நிகழ்வை பார்க்கவில்லை எனவும் வேதனை தெரிவித்துள்ளார்.
Next Story