பிரான்ஸ் : இஸ்லாம் பிரார்த்தனை மையத்தில் சட்ட விரோத ஆயுதங்கள் வைத்திருந்த 3 பேர் கைது

வடக்கு பிரான்சின் துறைமுக நகரான டங்கிர்க் அருகே உள்ள கிராண்ட் சைந்தே என்ற இடத்தில் இஸ்லாமிய பிரார்த்தனை மையத்தில் நடந்த சோதனையில் ஆயுதங்களுடன் 3 பேர் சிக்கினர்.
பிரான்ஸ் : இஸ்லாம் பிரார்த்தனை மையத்தில் சட்ட விரோத ஆயுதங்கள் வைத்திருந்த 3 பேர் கைது
x
வடக்கு பிரான்சின் துறைமுக நகரான டங்கிர்க் அருகே உள்ள கிராண்ட் சைந்தே என்ற இடத்தில் இஸ்லாமிய பிரார்த்தனை மையம் ஒன்று உள்ளது. இங்கு சட்ட விரோத ஆயுதங்கள் இருப்பதாகவும் ஐஎஸ் தீவிரவாதிகள் பதுங்கி உள்ளதாகவும் கிடைத்த தகவலையடுத்து, பாரிசில் இருந்து 200க்கும் மேற்பட்ட போலீசார் விரைந்து சென்று சோதனை நடத்தினர். பிரார்த்தனை மையம், அங்குள்ள மத தலைவர்களின் இல்லங்களில் சோதனை நீடித்தது. அப்போது, சட்ட விரோத ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. பிரார்த்தனை மையத்தில் இருந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். பிரார்த்தனை மையமும் சீல் வைக்கப்பட்டது. இதற்கிடையே, தங்கள் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாகவும் தீவிரவாதத்துக்கு தாங்கள் எதிரானவர்கள் எனவும் பிரார்த்தனை மைய மேலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்