விண்வெளி கழிவுகளை அகற்றும் கருவி வெற்றி...

விண்வெளியில் மிதக்கும் மின்னணு கழிவுகளை இங்கிலாந்து அனுப்பி வைத்த கருவி வெற்றிகரமாக அகற்றியுள்ளது.
விண்வெளி கழிவுகளை அகற்றும் கருவி வெற்றி...
x
விண்வெளியில் மிதக்கும் மின்னணு கழிவுகளை இங்கிலாந்து அனுப்பி வைத்த கருவி வெற்றிகரமாக அகற்றியுள்ளது. இந்த கருவிக்கு,''ரிமூவ்-டேப்ரீஸ்'' (Remove DEBRIS) என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஜூன் மாதம் அனுப்பப்பட்டது. தற்போது வரை இது மிக சிறப்பாக செயல்பட்டு வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், இந்த கருவி வெற்றிகரமாக, விண்வெளியில் பெரிய சாட்டிலைட் மின்னணு கழிவு ஒன்றை நீக்கியது. நாசாவின் செயலிழந்த அந்த சாட்டிலைட்டை, இந்த கருவி வெற்றிகரமாக கைப்பற்றியது. வலையை மேலே வீசி, இறுகப் பற்றிய பின்னர், இந்த ''சாட்டிலைட் குப்பை'' ஸ்பேஸ் ஷிப்பிற்கு கொண்டு வரப்பட்டது. அந்தக் காட்சியின் வீடியோ வெளியாகி உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்