ஐ.நா. அமைதி மாநாட்டில் பங்கேற்ற 3 மாத குழந்தை

ஐ.நா. பொதுமன்றத்தில் நடந்த நெல்சன் மண்டேலா அமைதி மாநாட்டில் பங்கேற்ற 3 மாத குழந்தை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
ஐ.நா. அமைதி மாநாட்டில் பங்கேற்ற 3 மாத குழந்தை
x
ஐ.நா. பொதுமன்றத்தில் நடந்த நெல்சன் மண்டேலா அமைதி மாநாட்டில் பங்கேற்ற 3 மாத குழந்தை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இந்த மாநாட்டில் பங்கேற்க வந்த 38 வயதான நியூசிலாந்து பிரதமர் ஜெஸிந்தா ஆர்டேர்ன், 3 மாதங்களே ஆன தனது குழந்தையுடன் மாநாட்டில் பங்கேற்றார். குழந்தை நீவ் டி அரோகாவுக்கு முத்தம் கொடுத்த பின்னர், மாநாட்டில் நியுசிலாந்து பிரதமர் ஜெஸிந்தா உரையாற்றினார். பெனாசீர் பூட்டோவுக்கு பின்னர் பதவியில் இருக்கும் போது குழந்தை பெற்ற இரண்டாவது பிரதமர் ஜெஸிந்தா. நியுசிலாந்தின் இளம் பிரதமரான ஜெஸிந்தா தான் பேறுகால விடுப்பு எடுத்த பிரதமர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஐ.நா. பொது மன்ற அரங்கில் 3 மாத குழந்தை நீவ்- ஐ பார்த்தது மகிழ்ச்சி தருவதாக அமைந்திருந்தது என ஐ.நா. செய்தித் தொடர்பாளர் ஸ்டெஃபானி டூஜாரிக் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்