மாலத்தீவு அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சி தலைவர் இப்ராகிம் முகமது ஸோலிஹ் வெற்றி

மாலத்தீவில் எதிர்கட்சியை சேர்ந்த இப்ராகிம் முகமது, புதிய அதிபராக வெற்றி பெற்றுள்ளார்.
மாலத்தீவு அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சி தலைவர் இப்ராகிம் முகமது ஸோலிஹ் வெற்றி
x
* மாலத்தீவில் நேற்று அதிபர் தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் மொத்தம் 92 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. 

* தேர்தலில், ஆளும் கட்சியான மாலத்தீவு முன்னேற்ற கட்சி சார்பில் அதிபர் அப்துல்லா யாமீனும், எதிர்கட்சியான மாலத்தீவு ஜனநாயக கட்சி சார்பில் இப்ராகிம் முகமதுவும் போட்டியிட்டனர். 

* தேர்தல் முடிந்ததும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முடிவில், எதிர்க்கட்சியை சேர்ந்த இப்ராகிம் முகமது 58 புள்ளி 3 சதவிகித ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். 

* அவருக்கு ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 808 வாக்குகள் கிடைத்துள்ளன. தற்போதைய அதிபர் அப்துல்லா யாமீன்,  95 ஆயிரத்து 526 ஓட்டுகளை பெற்று தோல்வியடைந்துள்ளார். 

* இதையடுத்து, இப்ராகிம் முகமது ஸோலிஹின் ஆதரவாளர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 30ஆம் தேதியன்று புதிய அதிபர் பதவியேற்பார் என தெரிகிறது. 

Next Story

மேலும் செய்திகள்