ஸ்ட்ராபெர்ரி பழத்தில் ஊசியை மறைத்து வைப்பது தீவிரவாதச் செயல் - ஆஸ்திரேலிய பிரதமர் ஆவேசம்
ஸ்ட்ராபெர்ரி பழத்தில் மெல்லிய ஊசியை மறைத்து வைப்பது தீவிரவாதச் செயல் என்றும் இதனைச் செய்பவர்களுக்கு 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை கிடைக்கும் என்றும் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிஸன் எச்சரித்துள்ளார்.
ஸ்ட்ராபெர்ரி பழத்தில், மெல்லிய ஊசியை மறைத்து வைப்பது தீவிரவாதச் செயல் என்றும், இதனைச் செய்பவர்களுக்கு 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை கிடைக்கும் என்றும் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிஸன் எச்சரித்துள்ளார். இங்கு, விற்பனையாகும் ஸ்ட்ராபெர்ரி பழங்களில் மர்ம நபர்கள் மெல்லிய ஊசியை நுழைத்து மறைத்துவிடுவதாக தகவல்கள் பரவின. இதனைச் சாப்பிட்ட சிலர், தொண்டையிலும், வயிற்றிலும் ஊசி சிக்கி பெரும் அவதிக்குள்ளானார்கள். ஆஸ்திரேலியாவில் இருந்து தரமான ஸ்ட்ராபெரி பழங்கள் இறக்குமதி செய்யப்பட்டுவந்த நிலையில், தற்காலிகமாகத் தடைவிதித்து நியூசிலாந்து அரசு உத்தரவிட்டுள்ளது.
Next Story