2025ல் வேலை வாய்ப்பை பறித்துவிடும் எந்திரங்கள்...! - அதிர்ச்சி அறிக்கை
வரும் 2025ம் ஆண்டில், சுமார் 12 துறைகளின் வேலை வாய்ப்பை எந்திரங்கள் தட்டிச்சென்று விடும் என உலகப் பொருளாதார மன்றம் தமது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.
World Economic Fourm நடத்திய 'எதிர்கால வேலை வாய்ப்புகள்' என்ற ஆய்வறிக்கையில், உலகளவில் 2022ம் ஆண்டில், 12 துறைகளில் 54 சதவீதத்திற்கும் அதிகமான இந்திய பணியாளர்களின் வேலை வாய்ப்பு, மறு சீரமைக்கப்பட்டு, எந்திரங்கள் பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த 4 ஆண்டுகளில் அனைத்து நிறுவனங்களும், கிட்டத்தட்ட முழு நேர பணியாளர்களைக் குறைத்து விட்டு, தானியங்கி எந்திர சேவைகளைப் பயன்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஆய்வறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது. ஆனாலும், புதிய பணிகள், வேலை வாய்ப்புகளை வழங்கும என கருதப்படுகிறது.
அதி வேக மொபைல் இன்டர்நெட், ரோபோக்கள், ஆட்டோமேஷன் மற்றும் தொழில் நுட்ப மாற்றங்கள் ஆகியவற்றால், 2018 மற்றும் 2022ம் ஆண்டுகளுக்கு இடையில், மனிதர்களுக்கும், எந்திரங்களுக்கும் இடையே குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுவதாக ஆய்வறிக்கையில் கூறபட்டுள்ளது.
உற்பத்தி, சேவைகள் மற்றும் உயர் தொழில்நுட்பம் ஆகியவற்றை உள்ளடக்கிய 12 தொழில் துறைகளில், மனிதர்களின் பங்களிப்பு 71 சதவீதமாக இருக்கிறது. 2025ம் ஆண்டுக்குள், மனிதர்களின் பங்களிப்பு 48 சதவீதமாக குறையும் என்றும், 52 சதவீத பணிகளை எந்திரங்கள் செய்யும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
Next Story