"தமிழ் மிகவும் அழகான மொழி" - தமிழில் பேசி அசத்திய செக் குடியரசு மாணவி
தமிழ் மிகவும் கடினமாக இருந்தாலும் அழகான மொழி என குடியரசுத் தலைவர் முன்னிலையில் செக் குடியரசு மாணவி தமிழில் பேசி அசத்தினார்
செக்குடியரசு உள்ளிட்ட 3 நாடுகளுக்கு 8 நாள் பயணம் மேற்கொண்டுள்ள குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பராகுவேயில் உள்ள சார்லஸ் பல்கலைக் கழகத்துக்கு சென்றார். அப்போது அவரது முன்னிலையில் சிமோனா ஷிசிலோவா என்ற செக் குடியரசு மாணவி, தமிழ் மிகவும் கடினமாக இருந்தாலும் அழகான மொழி என்றும், 20 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு பணியாற்றிய பேராசிரியர் ஒருவரின் முயற்சியால் தான் தம்மால் படிக்க முடிந்தது என்றும் அழகான தமிழில் பேசியது அங்கிருந்த பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. சமஸ் கிருதமும் கற்றுள்ளதாக தெரிவித்த அந்த மாணவி 2 முறை இந்தியா வந்துள்ளதாகவும் தெரிவித்தார். அந்த மாணவியின் அழகு தமிழ் பேச்சு, குடியரசுத் தலைவரின் அதிகாரபபூர்வ பக்கத்தில், தமிழ் மிகவும் அழகான மொழி என்ற தலைப்பில் இடம் பெற்றுள்ளது.
Next Story