சமீப காலமாக பிரபலமடைந்து வரும் "ஸ்னோ கைட்டிங்" சாகச விளையாட்டு
சமீப காலமாக பிரபலமடைந்து வரும் "ஸ்னோ கைட்டிங்" என்ற குளிர் கால விளையாட்டை குறித்து விரிவாக பார்க்கலாம்.
* காற்றில் பட்டத்தை பறக்க விட ஆசைபடுவோர் ஒரு புறம் , சறுக்கி விளையாடுவதில் ஆர்வம் கொண்டவர் ஒரு புறம், ஆனால் இவ்விரண்டையும் ஒரு சேர இயற்கை கொஞ்சும் பனி மலைகளில் விளையாடினால்? அது தான் ஸ்னோ கைட்டிங்...
* கையில் பட்டம், காலில் snow board என்று காற்றில் பறக்கும் பட்டத்தின் வேகத்திற்கு ஏற்ப சறுக்கி கொண்டே விளையாடப்படும் இந்த விளையாட்டு, அதிதீவிர சாகச விளையாட்டுகளுள் ஒன்று..
* சாதாரணமாக பட்டத்தை பறக்கவிடுவதிலேயே பல சிரமம், காற்றடிக்கும் திசைதான் பட்டத்தின் வேகத்தை தீர்மானிக்கிறது. இதில் கால்களில் ஸ்னோ போர்ட்களை மாட்டிக் கொண்டு இவர்கள் பல்டி அடிப்பது காண்போரை மெய்சிலிர்க்க வைக்கிறது.
* அமெரிக்கா, ஐஸ்லாந்து, நியூஸ்லாந்து உள்ளிட்ட குளிர் பிரதேச நாடுகளில் விளையாடப்படும் இந்த விளையாட்டு குறிப்பாக ஜூன் முதல் அக்டோபர் மாதங்களில் களைகட்டுகிறது.
* இதில் தற்போது சர்வதேச அளவிலான போட்டிகளும் நடத்தப்படுகின்றன.போட்டியின் போது வானில்கண்கவர்பட்டங்கள், பறவைகள் கூட்டமாக செல்வது போல் பார்வையாளர்களை கவர்கின்றன.
* இந்த அதிதீவிர சாகச விளையாட்டெல்லாம் நமக்கு சரிபட்டு வருமா என யோசித்துக்கொண்டிருந்தவர்களையெல்லாம் ,ஆங்காங்கே உருவாகியுள்ள சிறப்பு வகுப்புகள் களமாட வைக்கின்றன.
* குளிர்பிரதேசங்களுக்கு சுற்றுலா பயணியாக சாதாரணமாக செல்வோர் கூட, இந்த வகுப்பில் பயிற்சி பெற்று இவ்விளையாட்டை ஒரு கை பார்க்கின்றனர்.
Next Story