பாகிஸ்தானை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல பல அதிரடி முடிவுகள்

பாகிஸ்தானை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல பல அதிரடி முடிவுகளை எடுக்கப்போவதாக, அந்நாட்டின் புதிய பிரதமர் இம்ரான் கான் அறிவித்துள்ளார்.
பாகிஸ்தானை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல பல அதிரடி முடிவுகள்
x
பாகிஸ்தானின் பிரதமராக அண்மையில் பதவியேற்ற, இம்ரான் கான், தனது முதல் உரையில், பாகிஸ்தானில் நிலவும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க வேண்டும் என்றால், கோடீஸ்வரர்கள் அனைவரும் முறையாக வருமான வரி செலுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.பாகிஸ்தான், பிற நாடுகள் அளிக்கும் கடன் உதவியை நம்பியே வாழ்ந்து வருவதாகவும், அந்தப் பழக்கத்தை ஒழித்து, வறுமையைப் போக்கும் வகையில், இஸ்லாமிய நலச் சட்டப் படி, பாகிஸ்தானில் ஆட்சி நடத்தப் போவதாக இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.524 பணியாட்கள் கொண்ட மிகவும் ஆடம்பரமான பாகிஸ்தான் பிரதமர் மாளிகையில் தான் வசிக்கப் போவதில்லை எனவும், அதனை அருங்காட்சியகமாக மாற்றப் போவதாகவும், அதற்கு பதிலாக ஒரு சிறிய வீட்டில் இரண்டு பணியாட்களுடன் வசிக்கப் போவதாகவும் இம்ரான் கான் அறிவித்துள்ளார்.பாகிஸ்தானின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்றால்,  மக்களும் இது போன்ற எளிமையான வாழ்க்கையை நடத்த வேண்டும் என்றும், இருப்பவர்கள், இல்லாதவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்றும் இம்ரான் கான் வலியுறுத்தினார்.பாகிஸ்தான் பிரதமருக்காக பயன்படுத்தப்பட்டு வரும், விலையுயர்ந்த குண்டு துளைக்காத கார்களை விற்கப்போவதாகவும், இம்ரான் கான் அதிரடியாக அறிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்