பாகிஸ்தானின் ஒரு பகுதியே காஷ்மீர் - பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பேட்டி

பாகிஸ்தானுடன் மீண்டும் பேச்சுவார்த்தையை தொடர,பிரதமர் மோடி கடிதம் எழுதி இருப்பதாக,அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானின் ஒரு பகுதியே காஷ்மீர் - பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பேட்டி
x
பாகிஸ்தானின் புதிய பிரதமராக இம்ரான்கான் பதவியேற்றுள்ள நிலையில்,அவரது அமைச்சரவை உறுப்பினர்களும் புதிதாக பொறுப்பேற்றுள்ளனர்.இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் உசேன் குரைஷி,இந்தியாவுடன் பேச்சுவார்த்தையை தொடர வேண்டிய தேவை உள்ளதாகவும், வரலாற்றுப்படி பாகிஸ்தானின் ஒரு பகுதியாக காஷ்மீர் இருப்பதாகவும் தெரிவித்தார்.மேலும்,இந்தியா,பாகிஸ்தான் இடையே பேச்சுவார்த்தையை மீண்டும் தொடருவது குறித்து இம்ரான் கானுக்கு,  பிரதமர் மோடி கடிதம் எழுதியுள்ளார் எனவும் உசேன் குரேஷி தெரிவித்தார். 

பாகிஸ்தான்  வெளியுறவு அமைச்சர் கருத்து : இந்தியா மறுப்பு

"இம்ரான்கானுக்கு வாழ்த்து கடிதம் மட்டுமே மோடி அனுப்பினார்"
பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் குரேஷியின் கருத்துக்கு இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது.பாகிஸ்தானில் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள இம்ரான்கானுக்கு வாழ்த்து கடிதம் மட்டுமே பிரதமர் மோடி அனுப்பியதாகவும், இரு நாடுகள் பேச்சுவார்த்தை குறித்து எதுவும் குறிப்பிடவில்லை எனவும் பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.



Next Story

மேலும் செய்திகள்