பாகிஸ்தானின் 22வது பிரதமராக இம்ரான்கான் பதவியேற்பு : பஞ்சாப் அமைச்சர் சித்து பங்கேற்பு
பாகிஸ்தானில் சமீபத்தில் நடந்த தேர்தலில், முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் தலைமையிலான 'பாகிஸ்தான் தெக்ரிக் இ இன்சாப் கட்சி' அதிக இடங்களில் வெற்றி பெற்றது.
பாகிஸ்தானில் சமீபத்தில் நடந்த தேர்தலில், முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் தலைமையிலான, 'பாகிஸ்தான் தெக்ரிக் இ இன்சாப் கட்சி' அதிக இடங்களில் வெற்றி பெற்றது. நாடாளுமன்றத்திலும் அவருக்கு பெரும்பான்மை கிடைத்தது. இதையடுத்து, அந்நாட்டின் 22வது பிரதமராக இம்ரான்கான் இன்று பதவியேற்றார். அவருக்கு பாகிஸ்தான் அதிபர் மேம்னுன் உசேன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற விழாவில், இம்ரான்கானின் மனைவி புஷ்ரா மேனகா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்தியாவில் இருந்து காங்கிரசை சேர்ந்தவரான பஞ்சாப் மாநில சுற்றுலா அமைச்சர் சித்து கலந்து கொண்டார். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் ஆளுநர் மசூத் கான் அருகில் சித்து அமர்ந்திருந்தார். முன்னதாக, அவரை பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜாவித் பஜ்வா வரவேற்றார். அப்போது, ராணுவ தளபதியை சித்து கட்டித் தழுவியது குறிப்பிடத்தக்கது.
Next Story