எகிப்திய மம்மிகளின் ரகசியம் என்ன?
மம்மிகளை பதப்படுத்துவதில் அந்த கால துணிகளுக்கு முக்கியத்துவம் உள்ளதை தற்போதைய கண்டுபிடிப்பு நிரூபித்துள்ளது.
6000 ஆண்டுகள் பழமையான நார்த் துணி துண்டுகளில் சடலங்களை பதப்படுத்தும் ரசாயன ரகசியம் புதைந்துள்ளது. ஒரு பேழையில் பதப்படுத்தப்பட்டுள்ள எகிப்திய மம்மி தான் பழங்கால நாகரிகத்தின் அடையாளமாக விளங்கி வருகிறது.ஆனால் எகிப்தின் பழங்கால கல்லறைகளை கடந்து வடக்கு இங்கிலாந்தில் உள்ள போல்டன் (Bolton) அருங்காட்சியகத்தின் பராமரிப்பகத்தில் எகிப்திய மிம்மியின் ரகசியம் வெளிவந்துள்ளது.அதை பதப்படுத்துவதில் அந்த கால துணிகளுக்கு முக்கியத்துவம் உள்ளதை தற்போதைய கண்டுபிடிப்பு நிரூபித்துள்ளது. எள் எண்ணையை மையமாகக் கொண்டு இலைகளில் இருந்து எடுக்கப்படும் சாறு மூலம் சடலம் பதப்படுத்தப்பட்டுள்ளது. எகிப்தில் தற்போதும் Gum arabic என்ற சாறு விற்பனை செய்யப்படுகிறது. உடல் கெடாமல் காக்கும் பைன் மர பிசின் இதில் முக்கிய பங்காகும்.கி.மு.3000 ஆண்டுகளுக்கு முந்தைய மம்மியில் இதே கலவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Next Story