தைவான் : பரிசல் போன்று பிரம்மாண்டமாக காணப்படும் லில்லி இலைகள்
இயற்கையிலேயே இவ்வளவு பெரிய இலைகள் இருக்கின்றனவா அல்லது செயற்கையா என சந்தேகப்படும் அளவிற்கு பிரம்மாண்ட இலைகளை கொண்டிருக்கின்றன பெரிய லில்லி தாவரம்...
* தைவானில் உள்ள ஒரு பூங்காவில் இத்தாவரங்களை வளர்க்கின்றனர்.அதன் இலைகளின் மீது ஒருவர் ஏறி அமர்ந்தாலும் மூழ்குவதில்லை.அவ்வளவு பெரிதாகவும், வலுவானதாகவும் இருக்கின்றன இவற்றின் இலைகள்.46 சென்டி மீட்டர் வரை இலைகள் வளர்ச்சி அடைகின்றன.இந்த இலைகள் மீது ஏறி அமர்ந்து புகைப்படம் எடுத்துக்கொள்ள சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.
* இத்தாவரத்தின் அறிவியல் பெயர் Victoria amazonica..இதன் பூர்வீகம் பிரேசில் ஆகும்.அங்குள்ள அமேசான் காடுகளில் பரந்து விரிந்திருக்கும்.அங்கே எப்போது போனாலும் பார்க்கலாம்.ஆனால் மற்ற இடங்களில் இதை கொண்டு வந்தால், வெயில்காலங்களில் மட்டுமே வளரும் தன்மையைக் கொண்டுள்ளது.
* இவற்றின் பூக்கள் இரவில் மட்டுமே பூக்கும்.கால்பந்து அளவுக்கு மொட்டுக்களை விடும் இச்செடிகளின் பூக்கள் 3 நாட்கள் மட்டுமே மலர்ந்திருக்கும்.இந்த இலைகளின் கீழ் பகுதியில், முட்கள் இருக்கும்.மீன் உள்ளிட்டவை இந்த இலைகளை கொறித்து தின்னாமல் இருக்க இந்த முட்கள் உதவுகிறது.
Next Story